எட்டு வகை திருமண முறைகள்


உளமலி காதல் களவு எனப்படுவது
ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப
(117 - நம்பியகப் பொருள்)

மேற்கண்ட நூற்பாவில், நால்வேத நெறியினர் வகுத்த எட்டு வகைத் திருமண முறைகள் குறிப்பிடப்படுகின்றன.

  1. பிரமம் (அறநிலை) – தகுதியுடைய பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்கும் ஒருவனுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.
  2. பிரசாபத்தியம் (ஒப்பு) – தலைவன் மற்றும் தலைவி ஆகிய இருவரின் பெற்றோரும் மனமுவந்து ஒப்புக்கொண்டபின் நடைபெறும் திருமணம்.
  3. ஆரிடம் (பொருள்கோள்) – பெண்ணின் பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு பசுக்களையும் காளைகளையும் தானமாகக் கொடுத்து, அந்தப் பெண்ணை மணப்பது.
  4. தெய்வம் – பல வேள்விகளைச் செய்யும் வேள்வி ஆசிரியருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.
  5. கந்தர்வம் (யாழோர் கூட்டம்) – பெண் கொடுப்பவர், கேட்பவர் என யாரும் இல்லாமல், தலைவனும் தலைவியும் தனிமையில் சந்தித்து, தாமே இணைந்து வாழ்வது. இது யாழோர் கூட்டம் என்றும் அழைக்கப்படும்.
  6. ஆசுரம் (அரும்பொருள் வினைநிலை) – பெண்ணுக்கு நகைகள் அணிவித்து, அவளது சுற்றத்தாருக்கும் வேண்டுவன கொடுத்து அப்பெண்ணை மணந்து கொள்வது.
  7. இராக்கதம் – பெண்ணின் விருப்பமோ, அவளது பெற்றோரின் ஒப்புதலோதலோ இல்லாமல் அவளை வலுக்கட்டாயமாக அடைவது.
  8. பைசாசம் (பேய்நிலை) – தூங்கிக்கொண்டிருக்கும் பெண், போதையில் இருக்கும் பெண் போன்றவர்களுடன் வலுக்கட்டாயமாக இணைவது.