காந்தியுகத்தில் சிறுகதை வளர்ச்சி

ஆங்கிலேய அரசாங்க அலுவல்கள் நடைபெறாவண்ணம், சாத்வீக முறையில் இயக்கம் நடத்தி வந்த மகாத்மா காந்தி தம் கொள்கைகளைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்குப் பத்திரிகைகளையே பயன்படுத்தினார். "நவஜீவன்". "யங்இந்தியா" என்ற அவரது இரு பத்திரிகைகளும் இப்பணியிலீடு பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூற்றில் ஆரம் பிக்கப்பட்ட பத்திரிகைகளும் பொதுமக்களிடையே இயக்க இலட்சியத்தைப் பரப்பும் பணியிலீடுபட்டன. இதற்காகப் பிரதேச மொழிப் பத்திரிகைகளும் பல தோன்றின. இவை யாவும் காந்தீயத்தை மக்களிடையே பரப்பும் கருவிகளாயின. 

அரசியலில்‌ சாத்வீக எதிர்ப்பைப்‌ போதித்த காந்தியம்‌, சமுகத்‌ துறையில்‌ சாத ஓழிப்பையும்‌, பொருளாதாரத்‌ துறையிலே காதி இயக்கத்‌ தையும்‌, கலாசாரத்‌ துறையில்‌ மத சமரசத்தையும்‌ போதித்‌ குது, காந்தீய வழி நின்ற பத்திரிகைகளும்‌ இப்பிரச்சனை களைப்‌ பற்றி எழுதத்‌ தொடங்கின.

சாதி ஒழிப்பின்‌ அவசியம்‌, இந்திய ஒற்றுமை, தொழிற்‌ சங்க அவசியம்‌, தொழிலாளர்‌ ஓற்றுமை, கதர்‌ அணிய வேண்டிய அவயம்‌, கள்ளுக்கடை மறியல்‌, அந்நியத்‌ துணி எதிர்ப்பு மூதலியவற்றைப்‌ பற்றிப்‌ பத்திரிகைகள்‌ எழுதத்‌ தொடங்கின. கவிதைகள்‌ பயன்‌ படுத்தப்பட்டமை பயன்படுத்தப்பட்டன, இதனால்‌ கதை செழித்து வளரத்‌ தொடங்கிற்று.

தமிழில்‌ இப்‌பணியைச்‌ செய்த பத்திரிகைகள்‌ பல. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுவின்‌ "தமிழ்நாடு", திரு.வி.௧. வின்‌ “தேசபக்தன்‌", "நவசக்தி", டி.எஸ்‌. சொக்கலிங்கத்தின்‌ “காந்தி”, சங்கு கணேசனின்‌ “சுதந்திரச்சங்கு”, சீனிவாசனின்‌ "மணிக்கொடி”, வாசனின்‌ “ஆனந்தவிகடன்‌” முதலியனவும்‌, ஹநுமான்‌, பாரததேவி, பாரதமணி' , ஆனந்து. போதினி, சுதேசமித்திரன்‌, கலைமகள்‌ முதலியனவும்‌ சிறுகதைகளைப்‌ பிரசுரித்தன. தமிழ்ச்‌ சிறுகதை வரலாற்றில்‌ இதுவே முக்கேயமான காலகட்டமாகும்‌.

முன்னர்‌ குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இக்‌ கால கட்டத்திலேதான்‌ சிறுகதை தமிழ்‌ மக்களிடையே பரவத்‌ தொடங்கிற்று. ஆங்கில அறிவு இல்லா மக்களிடத்தில்  சிறுகதை பரவிய காலம்‌ இது. அவர்களோ இவ்விலக்கிய வடிவத்திற்கு அறிமுகமாகாதவர்கள். அவர்களுக்குப்‌ பரிச்சயமான கதை மரபு கொண்டு, இவ்விலக்கிய உருவம்‌ மக்களிடையே சனரஞ்சகமாக்கப்பட்டது. அதே வேளையில்‌, முன்னால்‌ வந்து வேரூன்றிய இலக்கிய வகையென்ற முறையிலும்‌ இது வளரத்‌ தொடங்கிற்று, இதனால்‌ சிறுகதையின்‌ வளர்ச்சி அகலமானதாகவும்‌ ஆழமானதாகவும்‌ அமைந்தது. சிறுகதையின்‌ ஆகல வளர்ச்சிக்குக்‌ காரணமானவர்‌ கல்கி. ஆழவளர்ச்சிக்குக்‌ காரணமானவர்கள்‌ மணிக்கொடிக்‌ குழுவினர்‌. இவ்விரு குழுவினரையும்‌ ஒட்டியே சிறுகதை, தமிழில்‌ வளர்ந்துள்ளது.